Pages

ஆன்லைன் ஷாப்பிங் - விலை மாறுபடுவது ஏன்?

நகர்புறங்களில் பெரும்பாலான மக்கள் தங்களது துணிமணிகள் முதல் மளிகை பொருட்களை வரை ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் வாங்குவதை அதிகரித்து வருகின்றனர். இந்தியாவில் ஆன்லைன் சில்லறை வர்த்தகம் உலக அளவில் மிகப்பெரியதாக வளர்ந்து வருகிறது. வரும் 2020-ம் ஆண்டிற்குள் 69 பில்லியன் டாலர் அளவுக்கு ஆன்லைன் ஷாப்பிங் வளர்ச்சியடையும் என கோல்டுமேன் சாக்ஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.


மக்கள் பொருட்கள் அல்லது சேவைகளை பெறுவதற்கு செலவிடும் தொகையை மதிப்பு கூட்டிய சராசரியாக கணக்கிட்டு நுகர்வோர் விலை குறியீடு வெளியிடப்படுகிறது. தற்போது வரை இதை கணக்கில் ஆன்லைன் ஷாப்பிங் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது பல்வேறு ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் சலுகை விலையில் பொருட்களை வாரி வழங்குவதால் நுகர்வோர்கள் அதில் குவிகின்றனர். மேலும் பொருட்களின் விலையும் வழக்கமாக விற்கப்படும் விலையில் இருந்து முற்றிலும் மாறுபடுகிறது. எனவே, நுகர்வோர் விலை குறியீட்டை கணக்கிட ஆன்லைன் ஷாப்பிங்கையும் அடிப்படையாக எடுத்துக் கொள்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

No comments:

Post a Comment

Want to Share This Song With Friends?

Related Songs Lyrics...

Quick Search