Pages

இனி சூரிய ஒளியினால் போனை 'சார்ஜ்' செய்யலாம்

மொபைல் போன்களில் மின்கலன் தீர்ந்து விடுவது ஒரு பெரிய பிரச்சனையாக பலருக்கும் இருக்கிறது. 'ஸ்மார்ட் போன்' திரைகளையே சூரிய மின்சாரம் தயாரிக்க, 'சன் பார்ட்னர் டெக்னாலஜிஸ்' மற்றும், 'கியோசெரா' நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றனர். சன் பார்ட்னர் தயாரித்துள்ள, 0.55 மி.மீ., தடிமனுள்ள சூரிய மின் ஒளி திரை, மொபைல் போனின் தொடுதிரைக்கு அடியில் இருக்கும். இது, 85 சதவீத ஒளியை கடத்தும் என்பதால், ஏறக்குறைய கண்ணாடி போலவே செயல்படும். இதை, மூன்று நிமிடங்கள் சூரிய ஒளியில் வைத்தால், ஒரு நிமிடம் பேசுமளவுக்கு மின்சாரம் உற்பத்தியாகி மின்கலனில் சேமிக்கப்பட்டுவிடும். தற்போது பரிசோதனையில் இருக்கும் இந்த தொழில்நுட்பம், மொபைல் போன்களுக்கு அவசரமாக, 'சார்ஜ்' செய்வதற்கு பயன்படும். ஆனால், முழுக்க முழுக்க சூரிய மின்னொளியிலேயே சார்ஜ் செய்யக்கூடிய திரையையும், மின்கலனையும் உருவாக்க கியோசெராவும், சன்பார்ட்னரும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.


No comments:

Post a Comment

Want to Share This Song With Friends?

Related Songs Lyrics...

Quick Search