Pages

3 வாரங்கள் இடை நில்லாமல் செல்லும் விமானம்

உலகின் மிகப்பெரிய விமானத்தை இங்கிலாந்தை சேர்ந்த ஹைபிரிட் ஏர் வெஹிக்கிள்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்ப்பதற்கு ராட்சத பலூன் போல காட்சியளிக்கும் இந்த ஆகாய கப்பல் சாதாரண விமானங்களை விட பல்வேறு சிறப்பம்சங்களையும், பயன்களையும் கொண்டிருக்கிறது.

ஏர்லேண்டர் எச்ஏவி304 என்ற பெயரில் வடிவமைக்கப்பட்ட 300 அடி நீளம் கொண்ட இந்த ஆகாய கப்பல் அமெரிக்க ராணுவத்துக்காக இங்கிலாந்தை சேர்ந்த ஹைபிரிட் ஏர் வெகிக்கிள்ஸ் நிறுவனம் தயாரித்தது. ஆனால், கடந்த 2013ம் ஆண்டு ராணுவத்துக்கான பட்ஜெட்டில் 40 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட இந்த விமானத்தை வாங்குவதற்கு போதுமான நிதி ஒதுக்காததால் அந்த விமானம் திரும்ப ஹைபிரிட் வெகிக்கிள்ஸ் நிறுவனத்திடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டது.


அமெரிக்கா கைவிட்டாலும், இங்கிலாந்து அரசின் நிதி ஒத்துழைப்புடன் இந்த ஆகாய கப்பலை ஹைபிரிட் ஏர் வெஹிக்கிள்ஸ் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. தற்போது தயாரிப்பு நிலையை எட்டியிருக்கும் இந்த விமானத்திற்கு ஏர்லேண்டர்-10 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. தற்போது உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380 விமானம் 240 அடி நீளம் கொண்டது. ஆனால், இந்த விமானம் 302 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டது. அதாவது, ஒரு கால் பந்தாட்ட மைதானம் அளவுக்கு வடிவம் கொண்டது.

மேலும் ஏர்லேண்டர்-10 ஆகாய கப்பல் மூன்று வாரங்களுக்கு தரையிறங்காமல் வானில் பறக்கும் திறன் கொண்டது. இதனால், கண்காணிப்பு பணிகளுக்கு மிக ஏற்றதாக இருக்கும். இந்த விமானத்தில் 2 பைலட்டுகள் இயக்கக்கூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ கண்காணிப்பு, மீட்புப் பணிகள், ராட்சத தளவாடங்களை எடுத்துச்செல்வதற்கான சாதனமாகவும் இருக்கும். தவிரவும், பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான வசதிகளையும் கொண்டிருக்கும். ஒரே இடத்தில் கூட பல நாட்கள் பறக்க விட முடியும்.

இது பிற விமானங்களை காட்டிலும் 70 சதவீதம் வரை எரிபொருள் சிக்கனம் கொண்டது. இந்த விமானத்தை மேலே எழுப்புவதற்கு 60 சதவீதம் ஹீலியம் வாயுவும், 40 சதவீதம் டீசலும் பயன்படுகிறது. இதற்காக, இந்த விமானத்தில் 4 வி8 டீசல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் முழுவதுமாக மின் மோட்டார்கள் மூலமாக இயக்கக்கூடிய ஏர்லேண்டரையும் தயாரிக்கும் திட்டம் உள்ளதாம். பிற விமானங்களை போன்று அதிவேகத்தில் பறந்து செல்லாது. அதிகபட்சமாக மணிக்கு 148 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கின்றனர். ஆனால், இடைநில்லாமல் 3 வாரங்கள் வரை பறக்கும் வசதி கொண்டது.

பேஸ்புக்கின் புதிய அப்டேட்ஸ்

நீண்ட நாட்களாக விரைவில் வெளியாகும் என கூறிவந்த ஃபேஸ்புக், தற்போது ப்ரொஃபைல் வீடியோவை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன்களில் இருந்து ஃபேஸ்புக் ஆப் மூலம் நேரடியாக வீடியோவை அப்லோட் செய்ய முடியும். மேலும் நம் கேலரியில் உள்ள வீடியோவையும் ப்ரொஃபைல் பிக்சராக்க முடியும் என்கிறது ஃபேஸ்புக்.


116 பேர் பாதிப்பு: அமெரிக்காவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்

தென்அமெரிக்க நாடுகளை அச் சுறுத்திய ஜிகா வைரஸ் தற்போது அமெரிக்காவிலும் வேகமாகப் பரவி வருகிறது. அந்த நாட்டில் இதுவரை 116 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசில், கொலம்பியா, வெனி சூலா உள்ளிட்ட தென்அமெரிக்க நாடுகளிலும் போர்ட்டோரிகா, கியூபா உள்ளிட்ட கரிபீயன் பகுதி நாடுகளிலும் ஜிகா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

எடிஸ் வகை கொசுக்கள் இந்த வைரஸை பரப்பி வருகின்றன. இதனால் பாதிக்கப்படுபவர் களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. கர்ப்பிணிகளுக்கு சிறிய தலை, மூளை வளர்ச்சி குறைபாடு, நரம்பு மண்டல குறை பாட்டுடன் குழந்தைகள் பிறக் கின்றன.


பிரேசிலில் மட்டும் இத்தகைய குறைபாடுகளுடன் சுமார் 5 ஆயிரத் துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன. எனவே இப் போதைக்கு பெண்கள் கருத்தரிக்க வேண்டாம் என்று தென்அமெரிக்க நாடுகளின் அரசுகள் அறிவுறுத்தி யுள்ளன. மேலும் உடல் உறவு மூலமும் ஜிகா வைரஸ் பரவுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை யடுத்து கியூபா, போர்ட்டோரிகா உள்ளிட்ட நாடுகளில் ஆணுறைக ளின் விலை குறைக்கப்பட் டுள்ளது.

இதுவரை தென்அமெரிக்க நாடுகளை மட்டுமே அச்சுறுத்தி வந்த ஜிகா வைரஸ் தற்போது அமெரிக்காவிலும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. அந்த நாட்டில் சுமார் 33 மாகாணங்களில் ஜிகா வைரஸ் பாதிப்புகள் கண்டறி யப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் 116 பேர் வைரஸால் பாதிக் கப்பட்டுள்ளனர். இந்த எண் ணிக்கை மிக அதிகமாக இருக்கக் கூடும், ஆனால் மக்களிடம் பீதியை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக அமெரிக்க அரசு எண்ணிக்கையை குறைத்துக் கூறுகிறது என்று சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


அண்மையில் வெளியிடப்பட்ட மருத்துவ ஆய்வறிக்கையில் நியூ யார்க், லாஸ்ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட 50 நகரங்களுக்கு ஜிகா வைரஸ் அச்சுறுத்தல் அதிகம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்பட வில்லை. எனவே மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர்.

பிரதமரை சந்திக்கிறார் ரஜினிகாந்த் - காரணம் என்ன?

பத்ம விருதுகள் வழங்கும் விழா மார்ச் 28ம் தேதி டில்லியில் நடக்க உள்ளது. இந்த விழாவில் பத்ம விருதை பெறுவதற்கு முன் பிரதமர் மோடியை ரஜினி சந்தித்து பேசி உள்ளதாக கூறப்படுகிறது. கலைத் துறையில் ரஜினியின் சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி இந்த ஆண்டு பத்ம விபூஷண் விருது ரஜினிகாந்த்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.







Want to Share This Song With Friends?

Related Songs Lyrics...

Quick Search