கர்நாடக மாநிலம், குல்பர்கா மாவட்டத்தில் வாஷிங் மெஷினுக்குள் சிக்கிக் கொண்ட இரண்டுவயது குழந்தையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை குழந்தையின் தாயார் வீட்டுவேலைகளில் மும்முரமாக இருந்தபோது, திறந்திருந்த வாஷிங் மெஷினுக்குள் தலையை நுழைத்து எட்டிப்பார்த்த அந்தக் குழந்தை, எதிர்பாராத விதமாக துணிகளை அலசும் இயந்திரத்தின் பகுதியில் சிக்கிக் கொண்டது.
விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணாமல் தேடிய தாயார், இறுதியாக வாஷிங் மெஷினுக்குள் அது சிக்கிக் கொண்டதை அறிந்ததும் துடிதுடித்துப் போனார். மெஷினின் கதவை திறக்க முயன்று தோற்றுப்போன அந்தப் பெண், உடனடியாக அக்கம்பக்கத்து வீட்டாரை உதவிக்கு அழைத்தார். அவர்கள் விரைந்துவந்து வாஷிங் மெஷினை உடைத்து, குழந்தையை காப்பாற்றிய வீடியோ காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளது.

No comments:
Post a Comment